கிரிக்கெட் (Cricket)
null

ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுத்தபின் "Sorry, Kid" மீம் மூலம் ஆர்.சி.பி.யை ட்ரோல் செய்த எல்.எஸ்.ஜி.

Published On 2024-11-25 03:14 GMT   |   Update On 2024-11-25 04:57 GMT
  • 11 கோடி ரூபாய் வரை ஆர்.சி.பி. போட்டியிட்டது.
  • பின்னர் ஐதராபாத் அணி போட்டியிட இறுதியாக எல்.எஸ்.ஜி. 27 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

2025 ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் அதிக விலைக்கு ஏலம் போவார் என கணிக்கப்பட்டது. அதன்படி அவரை எல்.எஸ்.ஜி. அவரை ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான அதிக தொகைக்கு (27 கோடி ரூபாய்) ஏலம் எடுத்தது.

ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் விடும்போது முதலில் எல்.எஸ்.ஜி. மற்றும் ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இரு அணிகளும் மாறிமாறி கேட்டன. அதிக பணம் வைத்திருந்த ஆர்.சி.பி. எப்படியும் ரிஷப் பண்ட்-ஐ எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆர்.சி.பி. 11 கோடி ரூபாய் வரை கேட்டது. அதன்பின் கேட்கவில்லை. பின்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எல்.எஸ்.ஜி.யுடன் போட்டியிட்டது. 20.75 கோடி ரூபாய்க்கு எல்.எஸ்.ஜி. கேட்டது. அப்போது டெல்லி அணி ஆர்.டி.எம்.-ஐ பயன்படுத்த முடிவு செய்தது.

பின்னர் எல்.எஸ்.ஜி. அணி 27 கோடி ரூபாய் நிர்ணயித்தது. அதற்கு டெல்லி தயாராக இல்லை. இதனால் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு எல்.எஸ்.ஜி. அணியால் எடுக்கப்பட்டார்.

எல்.எஸ்.ஜி.-க்கும் ஆர்.சி.பி.க்கும் இடையில் ஏலம் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது ரிஷப் பண்ட்-ஐ எடுத்துவிடுவோம் என்ற கணிப்பில் குட்டி ஸ்பைடர்மேன் பறப்பபோது போன்ற அனிமேஷன் படத்தை வெளியிட்டு "சின்னசாமிக்கு செல்லும் வழியில், ஒருவேளை?" என ஆர்.சி.பி. டுவீட் செய்திருந்தது.

ஏலம் எடுத்த பின் "Sorry, Kid" மீம் மூலம் எல்.எஸ்.ஜி. ட்ரோல் செய்துள்ளது.

நேற்றைய ஏலத்தின்போது ஆர்.சி.பி.யின் யுக்தியை கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. கே.எல். ராகுலை அவர்கள் கூடுதல் தொகை கொடுத்து எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Tags:    

Similar News