விளையாட்டு

பாரீசில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ஒலிம்பிக் கமிட்டி

Published On 2024-06-28 16:18 GMT   |   Update On 2024-06-28 16:18 GMT
  • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது.
  • ஒலிம்பிக்கில் ரஷியாவை சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பாரீஸ்:

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

இதற்கிடையே, ரஷியாவை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது.

ரஷிய வீரர்கள் மெத்வதேவ், ரூப்லெவ், கச்சனாவ், ரோமன் சபியுல், வீராங்கனைகள் டேரியா கசட்கினா, சாம்சனோவா, அலெக்சாண்ட்ரோவா, மிரா ஆன்ரிவா ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேபோல் பெலாரஸ் அரினா சபலென்கா மற்றும் விக்டோரியா அசரென்கா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் கூறுகையில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News