null
சிங்கப்பூர் ஓபன்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
- அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர்.
- பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகாமியை வீழ்த்தினார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் வாங் ஜி யி, 21-14, 21-14 என்ற செட்கணக்கில் ஜப்பானின் அயா ஒஹோரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் வாங் ஜி யி- பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டு சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றுள்ளார். சிங்கப்பூர் ஓபனில் இன்னும் ஒரு போட்டியில் (இறுதிப்போட்டி) வெற்றி பெற்றால் இந்த சீசனில் முதல் சூப்பர் 500 பட்டத்தை வெல்வார்.