விளையாட்டு

உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டை... சுதர்சன் பட்நாயக்கின் சிற்பத்திற்கு கிடைத்த கவுரவம்

Published On 2023-01-17 15:52 GMT   |   Update On 2023-01-17 15:52 GMT
  • கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 'உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் துவக்க விழாவின்போது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்டமான ஹாக்கி மட்டை மணல் சிற்பத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை 5000 ஹாக்கி பந்துகளை கொண்டு அலங்கரித்துள்ளார்.

இந்த நீண்ட மணல் சிற்பத்தை உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.

தனது மணல் ஹாக்கி மட்டை புதிய உலக சாதனை படைத்திருப்பது குறித்து சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியாவிடம் இருந்து இந்தச் சான்றிதழைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும் கூறி உள்ளார்.

Tags:    

Similar News