விளையாட்டு

தடகள போட்டியில் அசத்திய 95 வயது முதியவர்

Published On 2023-12-11 04:54 GMT   |   Update On 2023-12-11 04:54 GMT
  • உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
  • தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த எஸ்.வி தாரகராம மைதானத்தில் மாநில அளவிலான 42-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது.

குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்த நாராயணமூர்த்தி (வயது 95). இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தில் நடைபெறும் பொதுநிலை தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

நேற்று நடந்த தடகள போட்டியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு வட்டு எறிதல் ஈட்டி எறிதல் குண்டு எறிதல் உள்ளிட்டவைகளில் கலந்துகொண்டு அசத்தி காட்டினார்.

வருகின்ற 2024-ம் ஆண்டு புனேவில் நடைபெற உள்ள தேசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். சைவ உணவும், உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

இவருக்கு 60 வயதிற்கு மேற்பட்ட 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News