டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-10-04 18:11 GMT   |   Update On 2024-10-04 18:11 GMT
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றது.

பீஜிங்:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக், ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டின்-பேப்லோ கரீனோ ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி சிறப்பாக ஆடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News