டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச், பிரிட்ஸ்

Published On 2024-10-11 16:35 GMT   |   Update On 2024-10-11 16:35 GMT
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

பீஜிங்:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், செக் வீரர் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 6-7 (4-7) என இழந்த ஜோகோவிச், அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் பெல்ஜியத்தின் டேவி கோபின், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் கோபின் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் டேவிட் கோபின், ஜோகோவிச்சை சந்திக்கிறார்.

Tags:    

Similar News