டென்னிஸ்

பயிற்சியாளரை பிரிந்தார் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை

Published On 2024-09-14 21:06 GMT   |   Update On 2024-09-14 21:06 GMT
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2வது சுற்றுடன் ஒசாகா வெளியேறினார்.
  • பயிற்சியாளர் விம் பிசெட்டுடன் பணியாற்றப் போவதில்லை என ஒசாகா அறிவித்தார்.

டோக்கியோ:

ஜப்பானை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. இவர் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை ஆவார். சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2வது சுற்றுடன் ஒசாகா வெளியேறினார்.

இந்நிலையில், நவோமி ஒசாகா தனது பெல்ஜிய பயிற்சியாளர் விம் பிசெட்டுடன் பணியாற்றப் போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெல்ஜிய பயிற்சியாளருடன் பணிபுரிந்தபோது 2020 அமெரிக்க ஓபன் மற்றும் 2021 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

இதுதொடர்பாக, நவோமி ஒசாகா தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில், 4 ஆண்டுகள், 2 ஸ்லாம்கள் மற்றும் நிறைய நினைவுகள். ஒரு சிறந்த பயிற்சியாளராகவும் இன்னும் சிறந்த நபராகவும் இருப்பதற்கு நன்றி விம், உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

ஒசாகாவும், பிசெட்டும் பிரிவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News