டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய மெத்வதேவ், அல்காரஸ்

Published On 2024-10-09 22:04 GMT   |   Update On 2024-10-09 22:04 GMT
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.

பீஜிங்:

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.

இதில் மெத்வதேவ் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் உடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-4, 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜான் ஷெல்டனை 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News