டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் மெத்வதேவ், அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

Published On 2024-10-10 16:30 GMT   |   Update On 2024-10-10 16:30 GMT
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

பீஜிங்:

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நம்பர் 1 வீரரான இத்தாலி வீரர் சின்னருடன் மோதினார்.

இதில் சின்னர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு காலிறுதியில் நம்பர் 3 வீரரான ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்காரஸ், செக் வீரர் தாமஸ் மசாக் உடன் மோதினார்.

இதில் அல்காரஸ் 6-7 (5-7), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News