டென்னிஸ்

ஹாங்சோ ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய ஜோடி

Published On 2024-09-25 00:57 GMT   |   Update On 2024-09-25 00:57 GMT
  • ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
  • இதில் இந்திய இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

பீஜிங்:

ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது.

இதில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஜெர்மனியின் கான்ஸ்டன்டைன்-ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் முதல் செட்டை இந்திய ஜோடி 4-6 என இழந்தது. ஆனாலும் சுதாரித்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Tags:    

Similar News