டென்னிஸ்
சீனா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் வீராங்கனை கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை முச்சோவா 7-6 (7-5) என வென்றார். அதிரடியாக ஆடிய சபலென்கா 2வது செட்டை 6-2 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை முச்சோவா 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் முச்சோவா, சீன வீராங்கனை குயின்வென் ஷெங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.