டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்

Published On 2024-10-13 15:17 GMT   |   Update On 2024-10-13 15:17 GMT
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இறுதிப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச்சும் இத்தாலி வீரரான ஜன்னிக் சின்னரும் மோதினர்.

பீஜிங்:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரரான ஜன்னிக் சின்னர் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் சின்னர் 7-6 (7/4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். 

Tags:    

Similar News