டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வரேவுக்கு அதிர்ச்சி அளித்த டேவிட் கோபின்

Published On 2024-10-09 17:15 GMT   |   Update On 2024-10-09 17:15 GMT
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பீஜிங்:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பெல்ஜியத்தின் டேவி கோபின் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் கோபின் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் டேவிட் கோபின், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை சந்திக்கிறார்.

Tags:    

Similar News