விளையாட்டு

ஜூனியர் உலக குத்துச்சண்டை: தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா

Published On 2024-11-03 01:24 GMT   |   Update On 2024-11-03 01:24 GMT
  • இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா 5-0 என்ற கணக்கில் சிமோன் லிரிகாவை வீழ்த்தினார்.
  • ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராகுல் குண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

பப்ளோ:

ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (19 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி அமெரிக்காவில் உள்ள பப்ளோ நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் 75 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியின் சிமோன் லிரிகாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

மேலும் இந்திய வீராங்கனைகள் சன்சல் சவுத்ரி (48 கிலோ), அஞ்சலி குமாரி சிங் (57 கிலோ), வினி ( 60 கிலோ), அகன்ஷ் பலாஸ்வால் (70 கிலோ) ஆகியோர் தங்களது இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டனர்.

ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராகுல் குண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

Tags:    

Similar News