கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் 2025 மெகா ஏலம் சவூதி அரேபியாவில் நவம்பர் 24, 25 தேதிகளில் நடைபெற வாய்ப்பு

Published On 2024-11-04 11:35 GMT   |   Update On 2024-11-04 11:35 GMT
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
  • வீரர்களை தக்கவைத்து பின்பு அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடி ஏல தொகை உள்ளது.

ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, ஆர்சிபி 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 என வீரர்களை தக்க வைத்துள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிடம் மீதம் எத்தனை கோடி உள்ளது என்ற தகவலை பார்க்கலாம். அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடியும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது. சென்னையிடம் ரூ.55 கோடி, மும்பையிடம் ரூ.45 கோடி, லக்னோவிடம் ரூ.69 கோடி, ஐதராபாத்திடம் ரூ.45 கோடி, குஜராத்திடம் ரூ.69 கோடி, கொல்கத்தாவிடம் ரூ.51 கோடி, பெங்களூருவிடம் ரூ.83 கோடி, டெல்லியிடம் ரூ.73 கோடியும் உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News