விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப்- ஆடவர் 4*400 ஓட்டத்தில் இந்தியா 5ம் இடம்

Published On 2023-08-27 21:24 GMT   |   Update On 2023-08-27 21:24 GMT
  • உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் தொடர் ஓட்டப்பிரிவு வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
  • உலக தடகள சாம்பியன்ஷிப் 4*400 தொடர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடுாபெஸ்டில் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், ஆண்கள் தொடர் ஓட்ட தகுதிச்சுற்று போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் தொடர் ஓட்டப்பிரிவு வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் 4*400 தொடர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா 5ம் இடம் பிடித்தது.

4*400 தூரத்தை 2<59.92 வினாடிகளில் கடந்து இந்திய வீரர்கள் 5ம் இடம் பிடித்துள்ளனர்.

Tags:    

Similar News