தமிழ்நாடு

(கோப்பு படம்)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17.55 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

Published On 2022-07-10 20:26 GMT   |   Update On 2022-07-10 20:26 GMT
  • முதல் தவணையாக 3,53,000 பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது தவணையாக 10,88,865 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் நேற்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 1 லட்சம் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 30 மெகா தடுப்பூசி முகாம்களில் 4 கோடியே 44 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, 12-14 வயதுயுடைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் 16-03-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (10-07-2022) 18,94,484 (89.32%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 13,07,217 (61.63%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 15-17 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 03-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (10-07-2022) 30,23,682 (90.37%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 25,05,819 (74.89%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டம் 10-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (10-07-2022) மொத்தம் 18,05,929 (5.03%) பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (10-07-2022) நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 17,55,364 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 3,53,000 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 10,88,865பயனாளிகளுக்கும் மற்றும் 3,13,499 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்.

இதில் திருச்சி மாவட்டத்தில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதர மாவட்டங்களில் சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேலும், மாநிலத்தில் இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News