செய்திகள்

திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு விஜயகாந்த் நேரில் ஆறுதல்

Published On 2017-10-12 06:50 GMT   |   Update On 2017-10-12 06:50 GMT
திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களை நேரில் சந்தித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூறினார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவு உள்ளது.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்த 8 பெண்கள் உள்பட 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 147 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டு அறிந்து நோயாளிகளுக்கு ரொட்டி-பழம் வழங்கினார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர் ஏற்கனவே தயார் செய்து கொண்டு வந்திருந்த நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு கொடுத்தார்.

100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தவர்கள் நிலவேம்பு கசாயத்தை வாங்கி அருந்தினர்.

அப்போது மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News