செய்திகள்

கேளிக்கை வரி விவகாரத்தால் மூடப்பட்ட பி.வி.ஆர், ஐநாக்ஸ் தியேட்டர்கள் மீண்டும் திறப்பு

Published On 2017-10-24 16:07 GMT   |   Update On 2017-10-24 16:07 GMT
கேளிக்கை வரி அதிகரிக்கப்பட்டதால் மூடப்பட்ட பி.வி.ஆர், ஐநாக்ஸ் திரையரங்குகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை:

தமிழ்திரைப்படங்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகிதமும் உள்ளாட்சி கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. செப்டம்பர் 27 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இரட்டை வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேசனில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள் கடந்த 2-ம் தேதி முதல் மூடப்பட்டன. இந்நிலையில், மேற்கண்ட திரையரங்குகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News