செய்திகள்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிற 6-ந் தேதி புதுவை வருகிறார்

Published On 2018-06-30 04:04 GMT   |   Update On 2018-06-30 04:04 GMT
புதுவை பல்கலைக்கழகத்தில் வருகிற 6-ந் தேதி நடைபெறும் மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் இருந்து புதுவை வருகிறார். #VicePresidentVenkaiahNaidu
புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழகத்தில் வருகிற 6-ந் தேதி மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

புதுவை பல்கலைக்கழக மாணவர்களுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துரையாடுகிறார். இதற்காக 6-ந்தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புதுவை விமான நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு வருகிறார்.



அங்கு அவரை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை பல்லைக்கழகம் செல்கிறார்.

புதுவை பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து புதுவை அரசு சார்பில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். அன்றைய தினம் மாலையே டெல்லி புறப்பட்டு செல் கிறார்.

துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #VicePresidentVenkaiahNaidu

Tags:    

Similar News