செய்திகள்

வேப்பூர் அருகே மினி லாரி மீது கார் மோதல்: 2 பேர் மரணம்

Published On 2018-07-06 10:47 GMT   |   Update On 2018-07-06 10:47 GMT
வேப்பூர் அருகே இன்று காலை மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 30 பேர் படுகாயமடைந்தனர்.
வேப்பூர்:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியை சேர்ந்தவர் ராணி (வயது 40).

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தொண்டாங்குறிச்சியில் இவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராணி உள்பட 100 பேர் 2 மினி லாரிகளில் இன்று காலை தொண்டாங்குறிச்சி புறப்பட்டனர்.

இன்று காலை 10.30 மணிக்கு வேப்பூர் கூட்ரோடு அருகே மினி லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று பின்னால் சென்ற ஒரு மினி லாரி மீது மோதியது.

இதில் அந்த மினி லாரி நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் ராணி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந் தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 30 பேரை மீட்டு உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாசலம், பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சுப்பிரமணியன், சிவகாமி, பூங்காவனம், மலர்கொடி, அஞ்சலை உள்பட 7 பேரும், உளுந்தூர்பேட்டை ஆஸ்பத்திரியில் சுகந்தி (29), சரண்யா (50), தேவி (45), அழகம்மாள் (55), கமலம் (26), ஜெயா (45), முத்துலட்சுமி (40), பட்டம்மாள் (60), கல்யாணி (52) உள்பட 20 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News