செய்திகள்
எரிபொருள் நிரப்பும் பணிக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலை நிறுத்தம்
கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக முதலாவது அணு உலை நிறுத்தப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார். #KudankulamNuclearPowerPlant
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எரிபொருள் நிரப்புதல் மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக அணு உலைகள் ஆண்டுக்கு ஒரு முறை நிறுத்தப்படும்.
அதன்படி எரிபொருள் நிரப்புவதற்காகவும், பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காகவும் முதலாவது அணு உலை இன்று நிறுத்தப்பட்டது. இதனால் அந்த அணு உலையில் மின் உற்பத்தி நடைபெறவில்லை. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மட்டும் மின் உற்பத்தி நடந்து வருவதால் அங்கு 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எரிபொருள் நிரப்புதல் மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக முதலாவது அணு உலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அணு உலையில் இதுவரை 7 ஆயிரம் மணி நேரம் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியின் போது அதிகளவில் சத்தம் வெளியாகும். அதை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை’ என கூறப்பட்டுள்ளது. #KudankulamNuclearPowerPlant