செய்திகள்
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகளை கலெக்டர் கந்தசாமி வழங்கிய காட்சி.

கருக்கலைப்பு சம்பவங்களை தடுக்க ஆவின் பால் பாக்கெட்டுகள் மூலம் விழிப்புணர்வு

Published On 2018-12-22 04:16 GMT   |   Update On 2018-12-22 04:16 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவங்களை தடுக்க ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு லோகோ முத்திரையிடப்பட்டு வழங்கப்படுகிறது. #AavinMilk #AbortionAwareness
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருவில் உள்ள பெண் குழந்தைகளை கண்டறிந்து கருக்கலைப்பு அதிகமாக நடந்துள்ளது.

இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. சமீபத்தில் கருக்கலைப்பு செய்த 2 பெண் டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனை தடுக்க ‘பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அதைதொடர்ந்து நேற்று கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் லோகோ முத்திரையிடப்பட்டு வழங்கும் பணி தொடங்கியது.

இதனை கலெக்டர் கந்தசாமி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்படும் 18 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் விழிப்புணர்வு லோகோ முத்திரையிடப்பட்டு வழங்கப்படுகிறது என்றார்.  #AavinMilk
#AbortionAwareness



Tags:    

Similar News