செய்திகள்
கொரோனா வைரஸ்

ராமேசுவரம் வரும் வெளிமாநில பக்தர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்

Published On 2021-03-20 06:36 GMT   |   Update On 2021-03-20 06:36 GMT
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்றுச் செல்வது வழக்கம். மேலும் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமானோர் வந்து புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது உண்டு.

இதில் வடமாநில பக்தர்கள் தான் அதிகம். வடகாசியில் தரிசனத்தை முடித்துவிட்டு தென்காசி எனப்படும் ராமேஸ்வரம் வந்து தரிசனம் செய்வதை வடமாநில பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

இதனால் ராமேஸ்வரம் வரும் வெளிமாநில பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும்.

மேலும் அவர்கள் இ-பாஸ்அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News