தமிழ்நாடு

சென்னை வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு- ராதாகிருஷ்ணன்

Published On 2024-04-20 04:13 GMT   |   Update On 2024-04-20 04:13 GMT
  • 48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • 2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

மக்களவை முதற்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை வாக்குப்பெட்டிகள் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கு வாக்குபெட்டிகள் கொண்டு வர கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

கட்டுப்பாடு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும். மற்றொரு சாவி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியிடம் இருக்கும்.

பூத் சிலிப் வாங்கியவர்களுக்கு பெயர் விடுபட்டதற்கு பழைய பட்டியலை வழங்கி இருக்கலாம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும்.

2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

நகர்ப்புறங்களில் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News