தமிழ்நாடு

தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை- சென்னை ஐகோர்ட்

Published On 2024-08-12 07:20 GMT   |   Update On 2024-08-12 08:17 GMT
  • குடியிருப்பு பகுதியில் தேசிய கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
  • தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்.

அப்போது, சுதந்திர தினத்தையொட்டி குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் ஒரு வக்கீல் முறையீடு செய்தார். குடியிருப்பு பகுதியில் தேசிய கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதி, சுதந்திர தினத்தையோட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம். கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என்று நீதிபதி கூறினார்.

Tags:    

Similar News