படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
- அப்புக்குட்டி சொந்த ஊர் நாதன் கிணறு. அங்கு நடந்து வரும் முத்தாரம்மன் கோவில் திருவிழாவுக்கு அப்புக்குட்டி சென்றுள்ளார்.
- அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிகுழு, அழகிய தமிழ்மகன், வெந்து தணிந்தது காடு உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் அப்புக்குட்டி.
அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. நகைச்சுவை நடிகராக நடித்ததோடு குணசித்ர கதாபாத்தி ரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ராஜி சந்திரா இயக்கத்தில் கதாநாயகனாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அப்புக்குட்டி சொந்த ஊர் நாதன் கிணறு. அங்கு நடந்து வரும் முத்தாரம்மன் கோவில் திருவிழாவுக்கு அப்புக்குட்டி சென்றுள்ளார். விழாவையொட்டி நாதன் கிணற்றில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு ஊர் மக்களும் அப்புக்குட்டியும் மேஜை, கம்ப்யூட்டர், டி.வி. உள்பட பல்வேறு பொருட்கள் ரூ.11 லட்சம் செலவில் சீர் வரிசையாக வழங்கினர்.
எனது சொந்த ஊரான நாதன் கிணறு அரசு ஆரம்ப பள்ளியில் நான் 1-ம் வகுப்பு 2-ம் வகுப்பு படித்தேன்.
அந்த பள்ளிக்கு அடிப்படை வசதிகள் குறவைாக உள்ளன. இதை தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
இதையொட்டி எங்கள் ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கி உள்ளேன்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்படி உருவாக்கினால் அரசு பள்ளியில் படிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மேலும் வெளியூரில் இருந்தாலும் சொந்த ஊரில் வருடத்தில் சில நாட்கள் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.