தமிழ்நாடு

அதிமுக அழியும் என்ற எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது- எடப்பாடி பழனிசாமி

Published On 2024-11-24 12:54 GMT   |   Update On 2024-11-24 12:54 GMT
  • ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
  • ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமை எழுச்சி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எம்ஜிஆர், ஜானகி இருவருக்கும் நூற்றாண்டு விழா எடுத்த பாக்கியம் எனக்கு கிடைத்தது.

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த திரைத்துறையினருக்கு நன்றி.

எம்ஜிஆர், ஜெயலலிதா சந்தித்த பிரச்சினைகளை நாமும் சந்தித்து கொண்டிருக்கிறோம்.

எம்ஜிஆருக்காக திரைத்துறை வாழ்க்கையை துறந்தவர் ஜானகி, பல்வேறு சோதனையான காலக்கட்டத்தில் எம்ஜிஆர் உடன் இருந்தவர்.

அதிமுக எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றி பெற்றது தான் வரலாறு.

அதிமுக அழியும் என்ற எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News