தமிழ்நாடு

வட சென்னையை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2023-03-20 07:05 GMT   |   Update On 2023-03-20 07:35 GMT
  • வடசென்னையில், போதிய அளவில் அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாநிலை உள்ளது.
  • சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியையும் நடைமுறையிலுள்ள திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

சென்னை:

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான, சென்னை, பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட வாழ உகந்த நகரங்கள் பட்டியலில் முன் வரிசையில் உள்ளது.

இருப்பினும், நகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில், போதிய அளவில் அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லா நிலை உள்ளது.

சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய "வடசென்னை வளர்ச்சி திட்டம்" என்ற திட்டத்தை 1000 கோடி ரூபாய் செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும்.

இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியையும் நடைமுறையிலுள்ள திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News