3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்: பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
- செலவின பார்வையாளராக மதுகர் குமார், தொடர்பு அலுவலராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இலவச தொலை பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
வடசென்னை சட்டமன்ற தொகுதிகளான திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரத்திற்கு செலவின பார்வையாளராக அபிஜித் அதிகாரி, தொடர்பு அலுவலராக சண்முகம், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்கு செலவின பார்வையாளராக ஹரஹானந்த், தொடர்பு அலுவலராக முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய சென்னையின் வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக சுபோத் சிங், தொடர்பு அலுவலராக இளங்கோ மற்றும் துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மதுகர் குமார், தொடர்பு அலுவலராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்சென்னையின் விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக முகேஷ் குமாரி, தொடர்பு அலுவலராக ஹரிநாத் மற்றும் சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மானசி திரிவேதி, தொடர்பு அலு வலராக மோகன வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகளில் நேற்று முதல் தேர்தல் பணிகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இலவச தொலை பேசி எண்கள் 1950, 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.