தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியின் வங்கிக் கணக்கில் பணம் திருட முயற்சி- சைபர் கிரைம் விசாரணை

Published On 2024-05-14 07:25 GMT   |   Update On 2024-05-14 07:25 GMT
  • தொலை தொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து தன்னை மொபைலில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.
  • என் ஆதார் அட்டையை போலியாக தயாரித்து மோசடி கும்பல் எனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர்.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன், இவரது மனைவி டாக்டர் சரோஜா. அண்ணா நகரில் வசித்து வருகின்றனர்.

சைபர் கிரைம் மோசடி கும்பல் ஒன்று டாக்டர் சரோஜாவின் வங்கி பணத்தை மோசடி செய்ய முயன்றுள்ளது. இதனால் சரோஜாவின் வழக்கறிஞர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தொலை தொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து தன்னை மொபைலில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.

மத்தியப் பிரதேசம் இந்தூர் காவல் நிலைய போலீசார் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்து உள்ளனர். அந்த நபர் உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி உள்ளார்.

அந்த எண்களை தொடர்பு கொண்ட போது 'உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டு வாயிலாக மும்பையில் செயல்படும் தனியார் வங்கி மேலாளர் சஞ்சய் சிங் என்பவர் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

அது தொடர்பாக உங்களிடம் வீடியோ அழைப்பில் விசாரிக்க வேண்டும் என்று மிரட்டினார்.

அதன் பிறகு சுனில் குமார் என்ற நபரின் எண்ணில் இருந்து எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அரசு முத்திரையுடன் கைது வாரண்ட், சொத்து முடக்கம், ரகசிய ஒப்பந்தங்கள் என போலி ஆவணங்களை அனுப்பினார்கள்.

நீங்கள் நிரபராதி என்பதால் உங்களுக்கு உதவி செய்கிறோம் எனக் கூறி பணம் பறிக்க முயன்றனர். வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்டு மிரட்டினார்கள்.

நான் உடனே தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டேன். என் ஆதார் அட்டையை போலியாக தயாரித்து மோசடி கும்பல் எனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதன் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு மோசடி கும்பல் சென்னையில் இருந்து கொண்டு இந்தூரில் இருந்து பேசுவது போல் பேசியிருப்பதும் போலி ஆவணங்களை இந்த கும்பலே தயாரித்துள்ளதும் தெரிய வந்தது. எனவே டாக்டர் சரோஜாவிடம் பேசிய அந்த வடநாட்டு கும்பலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News