தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை பாஜக அரசு விரும்பவில்லை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published On 2024-12-03 16:18 GMT   |   Update On 2024-12-03 16:18 GMT
  • எளிய பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை பாஜக அரசு விரும்பவில்லை.
  • நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

டெல்லியில் நடைபெறும் அகில இந்திய சமூக நீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "சமூக நீதியை பாஜக அரசு பின்பற்றவில்லை. ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை பாஜக அரசு விரும்பவில்லை. சமூக ரீதியாக, கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கி விடுவதே சமூக நீதி."

"மகளிர் முன்னேற்றத்தையும் மத்திய பாஜக அரசு விரும்பவில்லை. ஒன்றிய அரசில் காலியாக உள்ள ஓபிசி, எஸ்சி பணியிடங்களை நிரப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்."

"நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டின் முயற்சிதான் அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு தொடர்பான முதல் திருத்தத்துக்கு, பிரதமராக இருந்த நேருவை ஊக்குவிக்க காரணமாக அமைந்தது," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News