சென்னை தீவுத்திடலில் நாட்டிய விழா- சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு
- இந்திய நாட்டிய திருவிழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் மற்றும் தீவுத் திடல் ஆகிய இடங்களில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
- இந்திய நாட்டிய திருவிழா நிகழ்ச்சிகள் முழுவதையும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சமூக வலைதளங்களின் மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு இந்திய நாட்டிய திருவிழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் மற்றும் தீவுத் திடல் ஆகிய இடங்களில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. ஜனவரி 12-ந் தேதி இந்த விழா முடிகிறது. பரதநாட்டியம், மோகினியாட்டம், மணிப்பூரி, ஒடிசி, குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு நடனங்கள், கிளாரினெட், சாக்ஸபோன், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் இசையுடன் இணைந்து 63-க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்திய நாட்டிய திருவிழா நிகழ்ச்சிகள் முழுவதையும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சமூக வலைதளங்களின் மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.