தமிழ்நாடு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Published On 2024-08-07 03:08 GMT   |   Update On 2024-08-07 05:48 GMT
  • காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
  • கருணாநிதியின் நினைவு நாளில் சிலை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை:

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவெறும்பூரை அடுத்த காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்னையில் இருந்தபடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவருடன் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர்.

திருச்சியில் காணொளி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இனிகோ இருதய ராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று இருந்தனர்.

கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளில் இந்த சிலை திறக்கப்பட்டதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் கழக நிர்வாகிகளும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News