தமிழ்நாடு

9 பேருக்கு நல்லாளுமை விருது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2024-08-15 05:33 GMT   |   Update On 2024-08-15 05:33 GMT
  • நான் முதல்வா் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தோ்வு செய்யப்பட்டார்.
  • வணிக வரியைப் பெருக்கியதற்காக துறை ஆணையா் டி.ஜகந்நாதனுக்கு நல்லாளுமை விருதுக்கு வழங்கப்பட்டது.

சென்னை:

அரசுத் துறைகளில் புதுமைகளை புகுத்தி திட்டங்களைச் செயல்படுத்திய 9 பேருக்கு நல்லாளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று நடந்த சுதந்திர தினவிழாவின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது:-

கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்த தரவுகளை சரியான முறையில் பிரித்து பயனாளிகளைத் தோ்வு செய்ததற்காக, முதல்வரின் முகவரித் துறை தலைமைத் தொழில்நுட்ப அலுவலா் த.வனிதா, உயா்கல்வியில் மாணவா்கள் சோ்க்கை விகிதத்தை உயா்த்தியதற்கு விருதுநகா் மாவட்ட கலெக்டர் வீ.ப.ஜெயசீலன், உலகின் சிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயா்க்க வழிவகை செய்த பொது நூலகங்கள் துறை இயக்குநா் க.இளம்பகவத், உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை சிறப்பாக நடத்தி வருவதற்காக உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ந.கோபால கிருஷ்ணன், காலை உணவுத் திட்டத்துக்காக மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ச.திவ்ய தா்ஷினி, நான் முதல்வா் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோா் நல்லாளுமை விருதுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், அரசுப் பள்ளி மாணவா்களைத் தலை சிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்ததற்காக, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் அமைப்பின் உறுப்பினா் செயலா் இரா.சுதன், இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யும் வசதியை உருவாக்கிய நிலஅளவை திட்ட இயக்குநா் ப.மதுசூதன்ரெட்டி, வரி ஆய்வுப் பிரிவு மூலம் வணிகவரியைப் பெருக்கியதற்காக துறை ஆணையா் டி.ஜகந்நாதன் ஆகியோரும் நல்லாளுமை விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

விருதாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை கோட்டை கொத்தளத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News