தமிழ்நாடு

சி.வி.சண்முகம் மீதான மற்றொரு வழக்கும் ரத்து

Published On 2024-08-13 06:21 GMT   |   Update On 2024-08-13 06:21 GMT
  • வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார்.
  • முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கை நேற்று ஐகோர்ட் நீதிபதி ரத்து செய்து தீர்ப்பு அளித்தார்

சென்னை:

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.முகமது ரியாஸ் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்தநிலை யில், இந்த மனு மீதான தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பித்தார். அதில், 'சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்வதாக கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கை நேற்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ரத்து செய்து தீர்ப்பு அளித்தார். இன்று மற்றொரு வழக்கையும் ரத்து செய்து இன்று தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News