செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பை 22 அடியில் பராமரிக்க முடிவு
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
- மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூந்தமல்லி:
மிச்சாங் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து 8 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 622 கன அடியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.59 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
சென்னை மக்களின் கோடைகால தண்ணீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 622 அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் பராமரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.