தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த நவதானியங்கள்

பழனி முருகன் கோவிலுக்கு நவதானியங்கள் காணிக்கையாக கொடுத்த பக்தர்கள்

Published On 2023-03-01 05:14 GMT   |   Update On 2023-03-01 05:14 GMT
  • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்
  • நெல், வெல்லம், மிளகாய் வற்றல், பயிறு உள்பட நவதானியங்கள் டன் கணக்கில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

பழனி:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பணம் மற்றும் நவதானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மாதம் ஒருமுறையும், திருவிழா காலங்களின் போது மாதம் இருமுறையும் எண்ணுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.7.17 கோடி வருவாய் கிடைத்தது.

இதனைதொடர்ந்து தற்போது நவதானிய காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டது. நெல், வெல்லம், மிளகாய் வற்றல், பயிறு உள்பட நவதானியங்கள் டன் கணக்கில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மூட்டைகளை கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர். இவை விரைவில் ஏலத்தில் விடப்படும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News