தமிழ்நாடு (Tamil Nadu)

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.

ஓமலூர் அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published On 2022-11-08 08:04 GMT   |   Update On 2022-11-08 08:04 GMT
  • ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
  • கூட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஓமலூர்:

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி நேற்று முன்தினம் சேலம் வந்தார். பின்னர் நாமக்கல்லில் அ.தி.மு.க 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதனை தொடர்ந்து நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கினார். இங்கு வெளியூர்களில் இருந்து வந்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் சேர்த்தல், நீக்கம் முகாம் நடக்கிறது. முகாமில் நிர்வாகிகள் கலந்துகொண்டு புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்.எல்.ஏக்கள் பாலசுப்பிரமணியன், மணி, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி, சுந்தர்ராஜன், ராஜமுத்து, மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடாஜலம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News