தமிழ்நாடு

தேக்கடி ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த யானைகள் கூட்டம்.

தேக்கடி ஏரியில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்

Published On 2023-04-30 05:53 GMT   |   Update On 2023-04-30 05:53 GMT
  • படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.

கூடலூர்:

சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள் , மான்கள், காட்டு யானைகள், காட்டு எருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

அதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களில் படகு சவாரியே முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரை பகுதிக்கு வருகின்றன. இதனை படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி மனக்கவலை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் படகை நிறுத்தி நீண்டநேரம் இக்காட்சியை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News