தமிழ்நாடு
சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி: தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
- கடந்த பத்து நாட்களாக அனைத்துத்துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.
- எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களான சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட வழங்கப்பட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து கடந்த பத்து நாட்களாக அனைத்துத்துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.
பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாக தனக்குத் தானே கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.