4 மாவட்டங்களை தொடர்ந்து ராணிப்பேட்டை, விழுப்புரத்திலும் விடுமுறை அறிவிப்பு
- சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை.
- செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
மிச்சாங் புயல் தீவிரமடைந்துள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கையும் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களைத் தொடர்ந்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.