தமிழ்நாடு
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது
- அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.
- தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மகேந்திரவாடி ரெயில் நிலையம் உள்ளது. இங்கு அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.
அதிகாலை 4.20 மணி அளவில் மகேந்திரவாடி ரெயில் நிலையம் லூப் லைன் வழியாக வரும்பொழுது சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.
இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.
லூப் லைனில் சக்கரங்கள் தடம் புரண்டதால் பிரதான தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை.