காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
- தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து கொடுக்கிறது.
அந்த வகையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. 6,244 காலி பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர் 2442 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பத்தினை அளிப்பதற்கு மார்ச் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் 441 பணியிடங்கள், தட்டச்சர்-1653, வனக் காவலர்-526, பல்வேறு துறை பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்வர்கள் 1.7.2024 அன்று 18 வயது நிரம்பியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனகள் விதிக்கப்பட்டுள்ளன.