தமிழ்நாடு

சென்னையில் கனமழைக்கு 2 பேர் உயிரிழப்பு

Published On 2023-11-30 04:26 GMT   |   Update On 2023-11-30 04:26 GMT
  • நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது.
  • அசோக் நகரில் சாலையில் செல்போன் பேசியபடி சென்ற மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார்.

சென்னை:

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசோக் நகரில் சாலையில் செல்போன் பேசியபடி சென்ற மணிகண்டன் (23) என்பவர் உயிரிழந்தார். செல்போன் கருகியுள்ள நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

தி.நகரில் மின்கம்பம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது மின்சாரம் தாக்கி 35 வயதான நபர் உயிரிழந்தார். மின்கம்பத்தோடு ஒட்டிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News