தமிழ்நாடு

கட்சிப் பணிகளை விரைவுபடுத்த முன்னாள் அமைச்சர்களுக்கு புதிய பொறுப்பு- இபிஎஸ்

Published On 2024-11-07 13:06 GMT   |   Update On 2024-11-07 13:06 GMT
  • கட்சிப் பணிகளை விரைவுபடுத்த "கள ஆய்வுக் குழுவினர்" நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிளை, வார்டு, வட்டம் வாரியாக கள ஆய்வு செய்து, கட்சி பணிகளை விரைவுப்படுத்துவதற்காக 'கள ஆய்வுக் குழுவினர்' நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும். புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கழகத்தின் சார்பில் 'கள ஆய்வுக் குழு' கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் C. சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, வரகூர் அ. அருணாசலம்.

மேற்கண்ட குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News