குரூப் 4 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியானது
- கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.
- தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் 3, தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இந்த வரிசையில், கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்தப் பட்டியல் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 6 வேலை நாட்களில் இந்த பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை வருகிற 21-ந்தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.