வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... லைவ் அப்டேட்ஸ்
- சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
- ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, எழும்பூர், புரசைவாக்கம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்ததை அடுத்து, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னையில் காலை முதலே கனமழை பெய்ய துவங்கி இருக்கிறது.
டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
14 நிவாரண முகாம்களில் 608 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. 21 சுரங்கப்பாதைகளில் 4-ல் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது- உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறேன்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 1080 கனஅடியில் இருந்து 1380 கனஅடியாக அதிகரிப்பு. மக்களின் குடிநீர் வசதிக்காக 134 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
கனமழை காரணமாக சேலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும், தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக, எங்களது ஆட்சிக் காலங்களில் மேற்கொண்டது போல், அம்மா உணவகங்களில் 3 நேரமும் தரமான உணவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழை பெய்து வருவதாலும் பேசின்பிரிட்ஜ்- வியாசர்பாடி ரெயில் நிலையம் இடையே தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சென்னை- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நாளை சென்னை, காஞ்சிபுரம், செயல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.