தமிழ்நாடு
கனமழை எச்சரிக்கை எதிரொலி- 3 மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை
- நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
- 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைகின்றன.
தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் முன்செனச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைந்துள்ளன.